திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி செயலாளர் பத்மஜா ஜனார்த்தன தலைமையில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி நகராட்சி பழைய பேருந்து அண்ணா சிலை அருகே திருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மாஜா ஜனார்த்தனன் தலைமையில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுனியம் பி பலராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். மேலும் அதிமுகவை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் மாணவரணி ராகேஷ், எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பி.டி. பானு பிரசாத், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டி சி மகேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.எம். ஸ்ரீதர், ஷியாமளா தன்ராஜ். அம்மா பேரவை இணை செயலாளர் எம் எஸ் எஸ் சரவணன் மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் தயாளன் முல்லை வேந்தன்,ஒன்றிய செயலாளர்கள் கும்மிடிப்பூண்டி கோபால் நாயுடு, மீஞ்சூர் முத்துக்குமார், அதிமுக நிர்வாகிகள் சேர்மேன் சிவக்குமார், தமிழ்ச்செல்வன், ஆறுமுகம் கும்மிடிப் பூண்டி நகர செயலாளர் எஸ் டி டி ரவி மீனவரணி சுரேஷ்., ஏழுமலை பொன்னேரி முன்னாள் தலைவர் பா. சங்கர் பாசறை சரவணன். மற்றும் கும்மிடிப்பூண்டி பொன்னேரி தொகுதியைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.
No comments