நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை..... தமிழக பாஜக தலைவராக நியமிக்க வாய்ப்பா..? - MAKKAL NERAM

Breaking

Tuesday, April 1, 2025

நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை..... தமிழக பாஜக தலைவராக நியமிக்க வாய்ப்பா..?

 


2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பாஜக தேசியத் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், சட்டசபை அரங்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர், நயினார் நாகேந்திரனின் இருக்கைக்கு சென்று 10 நிமிடம் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பிறகு அதிமுக - பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில், இந்த பேச்சுவார்த்தை கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment