• Breaking News

    காயப்போட்ட துணிகளை எடுக்க சென்றபோது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

     


    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மேலக்காவேரிகாவு பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவர் கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் காவலாளியாக பணியாற்றி ஓய்வுபெற்றார். இவருடைய மனைவி சிவமணி (வயது 64).

    இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கோவை கவுண்டம்பாளத்தில் உள்ள மகள் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிவமணி சிகிச்சை பெற்றார்.

    இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்த சிவமணி நேற்று மாலை காயப்போட்டிருந்த துணைகளை எடுக்க 14வது மாடிக்கு சென்றுள்ளார். துணிகளை எடுத்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிவமணி 14வது மாடியில் இருந்து தவறி விழுந்தார்.

    இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிவமணியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிவமணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments