முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது..... 500 ஏழைத் தாய்மார்களுக்கு சேலை வழங்கினார் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிறுணியும் பி.பலராமன்......



திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர். சிறுணியம் பி. பலராமன் தலைமையில் நடைபெற்றது.

ஒன்றிய செயலாளர்கள் தமிழ்ச்செல்வன் வினோத் தர்ம பிரகாஷ் முத்துக்குமார் சுந்தரவதனம் சம்பத் எஸ் எம்.ஸ்ரீதர் டி.சி.மகேந்திரன் பல்லவாடா .ஜெ.ரமேஷ் குமார் பிரசாத் வேதகிரி கோதண்டன் நகர செயலாளர் செல்வகுமார் பேரூர் செயலாளர் ரவி மாவட்ட இணை செயலாளர் சுமித்ரா குமார் மாவட்ட துணை செயலாளர் ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு பொதுக்குழு உறுப்பினர் அபிராமன் கமலா மாவட்ட பிற அணி செயலாளர்கள் பானு பிரசாத், ராகேஷ்,பத்மஜா ஜனார்த்தனன்,  சிராஜுதீன்,  இமயம் மனோஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை இறுதியில் மாவட்ட இலக்கிய அணி தலைவர் தலைமை ஆசிரியர் க.உதயகுமார் நன்றி உரையாற்றினார்.



இக்கூட்டத்தில் மாற்றுக் கட்சி சேர்ந்த இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஐநூறு ஏழை தாய்மார்களுக்கு சேலையை வழங்கினர்.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே. எம்.சின்னையா,தலைமை கழக பேச்சாளர் அன்பழகன், கழக இளம் பேச்சாளர் சந்துரு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பொது மக்களிடையே அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே. எம்.சின்னையா பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த பொழுது மக்கள் பயன் பெரும் வகையில் தாலிக்கு தங்கம், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம்.கல்வி உதவித்தொகை என பல திட்டங்கள் மக்களுக்கு தடையின்றி கிடைத்தன. ஆனால் இப்போது ஆளுகின்ற திராவிட மாடல் ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் பயன் பெறும் வகையில் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக மக்களுக்கு பயன்பெறாத திட்டங்களை அறிவித்து அதற்கான நிதியை ஒதுக்கி கொள்ளையடிக்கின்ற ஆட்சியாக இந்த  திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது. இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் மக்கள் அடிமைப்பட்டு கிடப்பது போல் மக்கள் உணர்கின்றனர். இந்த ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் எந்த ஒரு  பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். ஆகையால் வருகின்ற தேர்தலில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் நமது இலக்கு இரட்டை இலை சின்னம் மட்டுமே. ஆகையால் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து அந்த வெற்றுக்கணியை கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி யார் கரங்களின் சமர்ப்பிப்போம் என்று நாம் அனைவரும் உறுதி ஏற்போம் இவ்வாறு அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே. எம்.சின்னையா பேசினார். இக்கூட்டத்தில் கழக அம்மா பேரவை இனச் செயலாளர் பொன் ராஜா, கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், கழக மீனவர் அணி துணைச் செயலாளர் சுரேஷ், கும்மிடிப்பூண்டி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார் எல்லாபுரம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி தேவராஜ், மீஞ்சூர் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திருமலை, கழக நிர்வாகிகள் துரைராஜ், சம்பத், ஆறுமுகம், வெற்றி, செந்தில்குமார், ஜெயம்ரமேஷ், சுதாகர், குமார், சம்பத்குமார், ஆனந்தன், சிவராஜ், ஸ்ரீதர், மாரி, கோதண்டன், வெங்கடேசன், ரவி, ஜெயக்குமார், கேசவன். சசிகுமார், பிரகாஷ். இயேசு. விஜயகுமார்.சீனிவாசன்.உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments