• Breaking News

    ஜே.ஜே.ஜே அக்னி சிறார் பயிற்சி சிலம்பு பயிற்சி மையத்தின் சார்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கும்மிடிப்பூண்டியில் உற்சாக வரவேற்பு


     தமிழர் போர்ட்ஸ் அமைப்பு சார்பாக.இந்தியா இலங்கை இங்கிலாந்துஓபன் சிலம்பாட்ட போட்டி குவாட்டர் ட்ரெடிஷனல் தமிழர் ஸ்போர்ட்ஸ் அமைப்பின் சார்பாக கத்தாரில் நடத்தப்பட்டது. 

    பல நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக கும்மிடிப்பூண்டி யில் செயல்பட்டு வரும் ஜே ஜே ஜே அக்னி சிறார் சிலம்ப பயிற்சி மையத்தின் மாணவர்கள் பங்கேற்று 29 தங்கம், 6 வெள்ளி, 9 விண்கல பதக்கம் வென்று தாயகம் திரும்பினார்கள். கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் வந்தடைந்த சிலம்பாட்ட குழுவினருக்கு  அமோக கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சார்பாக அமோக  வரவேற்பளிக்கப்பட்டது.

    பட்டாசுகள் வெடிக்க, மேள தாளங்கள் முழங்க வரவேற்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு பொன்னாடையுடன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், சிலம்பாட்ட பயிற்சியாளர் கும்மிடிப்பூண்டி பகுதி வாழ் மக்களும் விளையாட்டு வீராங்கனைகளும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    No comments