கவர்னருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றதை முன்னிட்டு பல்லாவரத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, April 8, 2025

கவர்னருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றதை முன்னிட்டு பல்லாவரத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இதுவரை நடக்காத வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் நடந்துள்ளது. ஆளுநர்கள் மசோதாக்கள் மீது முடிவெடுக்க பெரும்பாலும் நீதிமன்றங்கள் காலக்கெடு எதையும் விதிக்காமல் இருந்த வந்த நிலையில் தமிழ்நாடு தொடர்ந்த வழக்கில் அது முதல் முதலாக நடந்துள்ளது மசோதா மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய கால வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில சுயாட்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை  அளித்ததையொட்டி பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகாமையில் பல்லாவரம் வடக்கு பகுதி கழக செயலாளர் மண்டல தலைவருமான இ.ஜோசப் அண்ணாதுரை அவர்களின் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

உடன் பல்லாவரம் தெற்கு பகுதி கழக செயலாளர் இ.எஸ்.பெர்னார்ட் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜானகிராமன் வட்டக் கழக செயலாளர்கள் பகுதி கழக நிர்வாகிகள் ஆகியோர் இருந்தனர்.

No comments:

Post a Comment