ஆபாச பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் அமைச்சர் பொன்முடி
வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பாலியல் தொழிலாளிகளின் உடலுறவு குறித்து ஆபாசமாக பேசினார். இதனை அவர் சைவம் மற்றும் வைணவ மதத்துடன் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக எம்பி கனிமொழி உட்பட திமுகவிற்குள்ளேயே அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்த சர்ச்சையை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் அவரை திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய நிலையில் அந்த பதவிக்கு திருச்சி சிவாவை நியமித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் திமுக பதவியை மட்டும் பறித்தால் போதாது. அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி திமுகவிலிருந்து நிக்க வேண்டும் என்றும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் அமைச்சர் பொன்முடி தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன்.
நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
No comments