• Breaking News

    திருவள்ளூர்: சோழவரம் வடக்கு ஒன்றியத்தில் திமுக இளைஞரணி சார்பில் தண்ணீர் பந்தல் மற்றும் நிழற்குடை திறப்பு விழா, மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது


    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் கூட்டுசாலையில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கதிரவன், சோழவரம் வடக்கு ஒன்றிய  இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ் ஆகியோரின் ஏற்பாட்டில் நீர்மோர் பந்தல் திறப்பு விழாவும் பெரியபாளையம், ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் நின்று செல்லும் வழியில் பொதுமக்களுக்கு நிழற்குடையும் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழாவும் சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் நா.செல்வசேகரன் தலைமையில் நடைபெற்றது.

    மாநில இளைஞரணி செயலாளர் அப்துல் மாலிக், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே. ரமேஷ்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு  பொது மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் இளநீர், கமலா பழம், திராட்சை, ஆரஞ்சு, தர்பூசணி, வெள்ளரிக்காய், பச்சை வாழைப்பழம், கீரை வகைகளை வழங்கி நிழற்குடையை திறந்து வைத்து, கல்வி நிதியுதவியாக 2 மாணவர்களுக்கு தலா ரூ. 10,000 வழங்கினர்.

    இதில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் லோகேஷ், மாவட்ட அவை தலைவர் பகலவன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வழக்கறிஞர் அன்புவானன் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பா.து தமிழரசன் சிறுவாபுரி ரமேஷ்  பிரபு ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    No comments