கும்மிடிப்பூண்டியில் கேஎல்கே அரசு மேல்நிலை ப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் 30 ஆண்டுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள பழமை வாய்ந்த கே.எல்.கே. அரசினர் மேல்நிலை பள்ளியில் 30 ஆண் டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு படித்த மாணவ- மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் ஒன்று கூடிய சந்திப்பு நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத் தில் நடைபெற்றது.
இதில் 1995-ம் ஆண்டு மேற் கண்ட அரசு பள்ளியில் படித்த மாணவ-மாணவிகளின் செல் போன் எண்களை பெற்று பிரத் தியேக வாட்ஸ் அப் குழுவை நண்பர்கள் வட்டாரத்தினர் கடந்த 6 மாத காலத்தில் காலத்தில் உருவாக்கினர். இதையடுத்துதிருச்சி, சேலம், காரைக்குடி, கள்ளக்குறிச்சி, நெல்லை, மதுரை கும்மிடிப்பூண்டி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் 30 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கண்ட அரசு பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த 126 மாணவர்கள், தங்களது குடும் பத்தினருடன் 500 பேர் ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்பது போல இந்த சந்திப்பு நிகழ்ச்சி யில் பங்கேற்றனர். அவர்கள் ஒரே குடும்பம் போன்று ஒருவ ருக்கொருவர் கட்டி தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அனைவ ரும் தங்களது பழைய நினைவு களை பகிர்ந்து கொண்டு குழு புகைப்படங்களை எடுத்து கொண்டனர்.சினிமா பாடல்களுக்கு பழைய மாணவர்கள் தங்களது குழந்தைகளுடன் ஆடி பாடி மகிழ்ந்தனர். தாங்கள் படித்த அரசு பள்ளியின் அடிப்படை தேவைகளுக்காக ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை அவர்கள் வாங்கி கொடுத்தனர். ஒரு திருமண நிகச்சியை போன்று அனைவருக்கும் அசைவம் மற்றும் சைவ விருந்து பரிமாறப்பட்டது.
முன்னதாக அவர்கள அனைவரும் குடும்பத்தோடு ஒன்று கூடி பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பலியான 26 பேருக்கும் போரின் போது உயிர்தியாகம் செய்தராணுவ வீரர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தினர்.
No comments