மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 16 விமானங்கள் தாமதம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, May 20, 2025

மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 16 விமானங்கள் தாமதம்

 


வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் நேற்று முதல் தற்போது வரை ஓருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையம் பகுதியில் பெய்து வரும் மழை, காற்று காரணமாக 10 விமானங்கள் உரிய நேரத்தில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன; பின்னர் வானிலை சரியானதும் தரை இறங்கின. 6 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இதனால் விமான பயணிகள் சற்று அவதி அடைந்தனர்.

No comments:

Post a Comment