திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் மீஞ்சூர் அடுத்த நாலூரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ரமேஷ்ராஜ் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது பேசுகையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலே முதலிடமாக திகழ்ந்தது போல் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கும்மிடிப்பூண்டி தொகுதிஅதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் அதேபோன்று வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் பத்து தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கழகத் தலைவர் மு க ஸ்டாலின் கரத்தில் ஒப்படைக்க அனைவரும் அயராமல் உழைத்து மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய பாடுபட வேண்டும் எனவும் கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாநில கழக நிர்வாகிகள் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அன்பு வாணன்.பாஸ்கர்சுந்தரம்,சி.எச்.சேகர், ஸ்டாலின், ஒன்றிய செயலாளர்கள் ஜெ.மூர்த்தி ஜெகதீசன்.,முரளிதரன், செல்வசேகரன், கி.வே. ஆனந்தகுமார், மணிபாலன், பரிமளம் சந்திரசேகர், சக்திவேல், பொன்னேரி நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், ஆரணி நகர செயலாளர் முத்து.பொன்னேரி நகராட்சி சேர்மன் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், அத்திப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் துணைத்தலைவர் எம் டி ஜி கதிர்வேல் கும்மிடிப்பூண்டி நகர செயலாளர் அறிவாழகன் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ்,மாவட்ட நிர்வாகிகள் பகலவன், சுப்பிரமணி, பா.செ. குணசேகரன், வெங்கடாஜலபதி, ரமேஷ், ரவி, ராஜா இளைஞர் அணி அமைப்பாளர் லோகேஷ்,மற்றும் ஒன்றிய நகரம் பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment