பிளஸ் 2 தேர்வில் ஆவுடையானூர் பள்ளியில் முதலிடம்பெற்ற மாணவனுக்கு மதிமுக பாராட்டு
பிளஸ் 2 தேர்வில் ஆவுடையானூர் பள்ளியில் முதலிடம்பெற்ற மாணவனுக்கு மதிமுக சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூர்- மாடியனூர் பாளையம் ஆ.பொன்னுச்சாமிநாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் சதீஸ் 587 மதிப்பெண் பெற்று பள்ளில் முதலிடம் பெற்றார். மேலும் தென்காசி மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.
இம்மாணவனை தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் ராமஉதயசூரியன் நேரில் சந்தித்து மதிமுக சார்பில் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். அப்போது மாணவனின் பெற்றோர் பாஸ்கர், அன்னபுஸ்பம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments