• Breaking News

    கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 4 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்..... மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் பங்கேற்பு......


    கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட் சியில் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் நான்காண்டுசாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் நா.பரிமளம் வரவேற்றார். மாநில நிர்வாகிகள் சி. எச்.சேகர், பாஸ்கரன் சுந்தரம், மாவட்ட நிர்வாகிகள் பகலவன், ரவி, வெங்கடாசலபதி, கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி  ராமஜெயம்,காளத்தி விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     தலைமை கழக பேச்சாளர் வேத உதய சூரியன் திராவிட மாடல் அரசின் நான்கு ஆண்டுகள் சாதனிகள் குறித்து பேசினார்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சாதனைகளை விளக்கிப் பேசினார்.  

    தொடர்ந்து, வெளிநாட்டில் நடந்த சிலம்பம் போட்டியிலும், மாநில அளவில் நடந்த தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்ப தக்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்வழங்கி பாராட்டினார். பொதுக்கூட்டத்தின் முடி வில்ஒன்றிய பொருளாளர் தேர்வழி சரவணன் நன்றி கூறினார்.

    இதில், ஒன்றிய துணை செயலாளர்கள் சுகு, ரவி, ஜெயராமன், தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி அமைப்பாளர் நத்தம் சரத்குமார், இளைஞர் அணி துணை அமைப் பாளர் ராஜ்குமார்,துணை அமைப்பாளர் தமிழ் குடிமகன், கருணாகரன் தேர்வழி ஊராட்சி திமுக நிர்வாகிகள் சாமி. அருள், தெய்வசிகாமணி, சீனிவாசன், நாகராஜ். தரனேசன், முரளி பிரபாகரன், டிரைவர் டிரைவர் சேகர், மோகன், பெரியசாமி பெரியசாமி ரத்தினம். முனுசாமி ரெட்டம் பேடு ஊராட்சி திமுக நிர்வாகிகள் கணபதி செந்தில். ஹேமகுமார் .கோபி.மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

    No comments