சூரப்பூண்டியில் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க கூட்டம்..... கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்பு.....
கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் சூரப்பூண்டி ஊராட்சியில், திமுக ஆட் சியின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை நடை பெற்றது.
கூட்டத்திற்கு, மாணவரணி அமைப்பா ளர் வேணுகோபால் வர வேற்றார். மேற்கு ஒன்றிய செயலாளர் மு.மணிபா லன் தலைமை தாங்கினார்.
மாநில, மாவட்ட நிர்வாகிகள்.சி.எச் சேகர், உமாமகேஷ்வரி, ரமேஷ், பொதுக்குழுஉறுப்பினர் குணசேகரன், வெங்கடாசலபதி, பேரூர் செயலாளர் அறிவழகன், மு.பாஸ்கரன், ஒன்றிய நிர் வாகிகள் ஜோதிலிங்கம், ஏசுரத்தினம், மஸ்தான். உதய காந்தம்மாள், திரு ஞானம், இளைஞரணி சந்திரமோகன், அமரமேடு முத்து, சூரப்பூண்டி தொண் டர்கள் பணத்தமேடு கண் டிகை விக்டர், பிரதாப், முரளி, தேவன், ரமேஷ், கதிரவன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். திமுக பேச்சாளர்கள் தமிழ்சாதிக்,இளம்முருகு ஆகியோர் திமுக ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசினர். சிறப்பு அழைப் பாளராக தலைமை செயற் குழு உறுப்பினரும் கும்மி டிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் கலந் துகொண்டு, ஏழை, எளிய மக்களுக்கு இலவச பட்டா, ஜூன் மாதம் விடுபட்ட மகளிர் உரிமைத்தொகை பெற்று தருவதாக கூறியுள்ளார். திமுகவினர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
No comments