ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , கீழ்வாணியில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு துறை 8729 கீழ்வாணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் 37விவசாயிகளுக்கு தலா 87000வீதம் 32இலட்சத்து 19,000மதிப்பில் கறவை மாட்டுலோனும்,கீழ்வாணி மற்றும் மூங்கில் பட்டி பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த குழுவினருக்கு 32இலட்சத்து 42ஆயிரம் மதிப்பிலான கடன் தொகையையும், என மொத்தம் 40நபர்களுக்கு 64இலட்சத்து 64ஆயிரம் மதிப்பிலான கடன் தொகைக்கான காசோலைகளை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன் ,கூட்டுறவு சங்க அந்தியூர் வட்ட சார் பதிவாளர் பிரபு ,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பழனிச்சாமி ,கீழ்வாணி ஊராட்சி ஊராட்சி முன்னாள் செயலாளர் பழனிச்சாமி மற்றும் திமுக நிர்வாகிகள் விஜயன் , செல்வராஜ் , செங்கோட்டையன் , பழனிச்சாமி , துரைசாமி , சிவக்குமார் , ராமு , ஆறுமுகம், லீலாவதி , சுந்தரமூர்த்தி மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471 , 6382211592 .
No comments:
Post a Comment