மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் துவக்கி வைத்தார் - MAKKAL NERAM

Breaking

Saturday, May 31, 2025

மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் துவக்கி வைத்தார்

 


தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் 29/05/2025 அன்று காணொளி காட்சி மூலமாக ரூபாய் 53.50 கோடி மதிப்பீட்டில் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14 ல் உள்ளடங்கிய வார்டு எண்கள் 188 ,189 மற்றும் 190 க்கு உட்பட்ட மயிலை பாலாஜி நகர், காமகோடி நகர் ,மற்றும் வள்ளல் பாரி நகர், பகுதிகளுக்கான விரிவான பாதாள சாக்கடை திட்டத்தை துவக்கி வைத்த நிகழ்வில் மடிப்பாக்கம் பகுதியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்த் ரமேஷ் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் J.K. மணிகண்டன் சமீனா செல்வம் , உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment