• Breaking News

    கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா..? டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு

     


    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக போலீசார் அவ்வப்போது சாராயம் விற்பனை மற்றும் சாராயம் காய்ச்சுதல் குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே, மணிமலை கரடு பகுதியில், கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா என அவ்வப்போது போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் சாராயம் தயாரிக்க பயன்படும் வெள்ளை வேல பட்டை மரம் 1 லட்சத்திற்கும் மேல் உள்ளது. இதனால் அப்பகுதிகளில் போலீசார் டிரோன் மூலம் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    No comments