தாம்பரம் மாநகராட்சி மூலம் புனரமைக்கும் பணி கால்வாய் அடைத்து குளம் போல் ஆக்கிரமிப்பு தவறான முறையில் நடைபெற்று வருகிறது மக்கள் பசுமை இயக்கம் சார்பில் மனு - MAKKAL NERAM

Breaking

Thursday, May 15, 2025

தாம்பரம் மாநகராட்சி மூலம் புனரமைக்கும் பணி கால்வாய் அடைத்து குளம் போல் ஆக்கிரமிப்பு தவறான முறையில் நடைபெற்று வருகிறது மக்கள் பசுமை இயக்கம் சார்பில் மனு


செங்கல்பட்டு மாவட்டம் -தாம்பரம் வட்டம் பெருங்களத்தூர்  - புல எண் 342,341/2,279 & 368 ஆகிய புல எண்களில் பாப்பன் கால்வாய் மற்றும் அடையாறு ஆற்றின் இணைப்பு கால்வாயானது நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ளது.

தற்போது தாம்பரம் மாநகராட்சி மூலம் புனரமைக்கும் பணி கால்வாய் அடைத்து குளம் போல் ஆக்கிரமிப்பு காரர்களுக்கு எதுவாக இந்த பணி தவறான முறையில் நடைபெற்று வருகிறது என்றும் அதன் அருகில் கட்டுமான பணிகள் விதிமுறைகள் பின்பற்றாமல் நடைபெறுகிறது என்றும் மக்கள் பசுமை இயக்கம் நிறுவனத்தலைவர் நாஞ்சில் C மனோகரன் மாவட்ட ஆட்சித்தலைவர், நீர்வளத்துறை ,தாம்பரம் மாநகராட்சிக்கு புகார் மனு அளித்து இருந்தார்.

அதனால்  நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி இந்த பணியை ஒழுங்கு முறை படுத்த வேண்டி தாம்பரம் மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.இந்த பணியானது பல ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆக்கிரமிப்பு செய்ய வழிகோலும் விதத்தில் உள்ளது என்றும் இந்த கால்வாய் ஒட்டி நடைபெற்று வரும் கட்டுமானங்கள் விதிமுறைகள் கடைப்பிடிக்க படாமல் நடைபெற்று வருகிறது என்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு   கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பணியை தாம்பரம் மாநகராட்சி ஆணையர்  சரி செய்ய தவறும் பட்சத்தில் இந்த வருடம் மழை பருவ காலத்தில் சுமார் 1500 குடும்பங்கள் வெள்ளநீரில் மூழ்கும் அபாய‌நிலை உள்ளது.மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்படடுள்ளது .இது சம்மந்தமாக தாம்பரம் மாநகராட்சி நகர திட்டமிடல் அதிகாரி திரு. சிவக்குமார் அவர்களை நேரில் சந்தித்து  மக்கள் பசுமை இயக்க நிர்வாகிகள்  அதன் சம்மந்தமான அனைத்து ஆவணங்களையும் அளித்தனர் .இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்க மக்கள் பசுமை இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.

No comments:

Post a Comment