சத்தியமங்கலம் வடக்குபேட்டை தண்டு மாரியம்மன் குண்டம் திருவிழாவில் சத்தி நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி நீர்,மோர் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் - MAKKAL NERAM

Breaking

Wednesday, May 14, 2025

சத்தியமங்கலம் வடக்குபேட்டை தண்டு மாரியம்மன் குண்டம் திருவிழாவில் சத்தி நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி நீர்,மோர் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்


ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம்  வடக்குபேட்டை  அருள்மிகு தண்டு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு வடக்குப்பேட்டை திருநீலகண்டர் வீதியின் சார்பாக நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சியை சத்தியமங்கலம் திமுக நகர செயலாளரும் சத்தியமங்கலம் நகராட்சி  தலைவர்  ஆர். ஜானகி ராமசாமி  தலைமை தாங்கி  நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தார் .

 மேலும் இந்த நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் நகராட்சி 9வது வார்டு உறுப்பினர் புஷ்பவள்ளி  முருகன் மற்றும் திருநீலகண்டர் வீதியைச் சேர்ந்த ஆ.கண்ணன்,  எஸ்.டி.கௌதமன், ஏ.செந்தில்குமார், எஸ்.பி.ஆறுமுகம் , எஸ்.கே.நாகராஜ் , எஸ்.என்.ஆறுமுகம் , எஸ்.என்.சம்பத்குமார் , எஸ்.நித்தியானந்தம் , ஏ.தனபால் , எஸ்.என்.ரவிச்சந்திரன், எஸ்.என்.கோபால்சாமி, எஸ்.சுந்தர்ராஜ் , எஸ்.குணசேகர் சதாசிவம்  மற்றும் பெரியவர்கள்,  தாய்மார்கள் ,  குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

 மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment