திருக்குவளை ஊராட்சியைச் சேர்ந்த பயனாளி ஒருவருக்கு கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கிய கல்வி வளர்ச்சி அறக்கட்டளை குழு தலைவர் சோ.பா. மலர்வண்ணன், திருக்குவளை ஊராட்சியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
கிராமப்புறங்களில் உள்ள குடிசை வீடுகள் அனைத்தையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் நோக்கில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருக்குவளை சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை குழு தலைவர் சோ.பா. மலர்வண்ணன் பங்கேற்று 23 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கினார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுதா அருணகிரி, ஊராட்சி செயலர் எஸ்.ஆரோக்கியமேரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.பணி ஆணை பெற்ற பயனாளிகள் ஆறு மாத காலத்திற்குள் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
கீழ்வேளூர் தாலுக்கா நிருபர் த. கண்ணன்
No comments:
Post a Comment