தமிழகத்தில் ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியவர் கைது - MAKKAL NERAM

Breaking

Tuesday, May 13, 2025

தமிழகத்தில் ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியவர் கைது

 



அரக்கோணம் அடுத்த திருவாலங்காடு ரயில்வே நிலையம் அருகே கடந்த ஏப்.25-ம் தேதி தண்டவாளத்தின் இணைப்புகளில் உள்ள போல்ட் நட்டுகளை கழட்டி ரயிலை கவிழ்க்க சதித்திட்டம் செய்யப்பட்டது, தமிழகம் முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் தேடி வந்தனர். 

பின்னர் 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் பெரம்பூர், ஆவடி, வேப்பம்பட்டு, அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு ரயில்வே நிலையங்களில் உள்ள தண்டவாள இணைப் புகளில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க மீண்டும் சதித்திட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ரயில் நிலையம் மற்றும் பெட்டிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து ரயில்வே காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.இந்நிலையில் கடந்த 8ம் தேதி தெலங்கானா மாநிலம் காச்சிகுடா ரயில்வே நிலையம் அருகே உள்ள யார்டு பகுதியில் தண்டவாளத்தில் கற்களை வைத்த நபரை ரயில்வே காவல் துறையினர் பிடித்து விசாரித்தனர். 

இதில், அவர் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித் வார் பகுதியைச் சேர்ந்த ஓம் (64) என்பது தெரியவந்தது.மேலும், இந்த நபர் தான் அரக்கோணம் பகுதியில் உள்ள ரயில்வே நிலையங்களில் தண்டவாளத்தின் இடையே கற்களை அடுக்கி வைத்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை, காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அவரை தமிழகத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment