• Breaking News

    சித்ரா பௌர்ணமி பூஜை விழாவில் நீர்,மோர் வழங்கும் நிகழ்ச்சியை பொன் விஸ்வநாதன் நாடார் தொடங்கி வைத்தார்


    நாமக்கல் மாவட்டம் ,  திருச்செங்கோடு கருமாபுரம் சான்றோர்குல நாடார் குரு மடத்தில் சித்ரா பௌர்ணமி பூஜை விழா சான்றோர் குலகுரு மடம் தலைவர் நடேசன் நாடார் மற்றும் பொதுச் செயலாளர் சுந்தர்ராஜன் நாடார்  தலைமையில்  சீரும் சிறப்புமாக நடைபெற்றது.  பட்டி தொட்டி எங்கும் இருக்கும் நாடார் குல சொந்தங்கள் சிறப்பு பூஜையில்  கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    இந்நிகழ்ச்சியில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் எம் கே டி கோவிந்தசாமி நாடார், நாடார் பேரவை பிரேம்குமார் நாடார், டிஎஸ்பி ஓய்வு கணேசன் நாடார்,ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் கணேஷ் நாடார்,மாநில நிர்வாகிகள் எஸ் எஸ் எஸ்.சுப்பிரமணிய நாடார், கலைநாடார் பொன்மணி நாடார், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் நாடார், ஈரோடு ஒன்றிய தலைவர் கேபிள் ஈஸ்வரன் நாடார், சென்னிமலை ஒன்றிய பொருளாளர்  சுந்தரம் நாடார் துணை செயலாளர் கோவிந்தராசு நாடார், மற்றும் குமரவேல் நாடார் ஜெகநாதன் நாடார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     நிகழ்ச்சியில் முன்னதாக  நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின்  சார்பில் நாமக்கல் மாவட்ட தலைவர் அட்லஸ் செந்தில்  நாடார் தலைமையில் மாநில நிர்வாகி கிருஷ்ணகுமார் பள்ளிபாளையம் ஒன்றிய தலைவர் மூர்த்தி நாடார் நாமக்கல் மாவட்டம் மகளிர் அணி தலைவி பேபி மூர்த்தி நாடார்  ஏற்பாட்டில் பக்தர்களுக்கு நீர்மோர் பந்தல் அமைத்து  நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சியை  நிறுவனத் தலைவர் பொன்.விஸ்வநாதன்நாடார் தொடங்கி வைத்தார்.

     மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments