• Breaking News

    நாகை: செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் இயக்கம் சார்ந்து கூட்டம் நடைபெற்றது



    தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்க மாநில மாநாட்டு தீர்மானத்தின்படி, நாகப்பட்டினம் மாவட்டம் சார்பாக இன்று 12-05-2025 கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் இயக்கம் மாவட்டத் தலைவர் ஜெயபாரதி, மாவட்டச் செயலாளர் ராம்குமார் தலைமையில் நடைபெற்றது. 

    நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் தேர்தல் வாக்குறுதி 356ஐ நிறைவேற்ற வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும், மகப்பேறு விடுப்பு ஊதியம் வழங்கிட வேண்டும்,  வெளிப்படையான  மாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய அட்டையை  அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.

    நாகை மாவட்ட நிருபர் ஜி. சக்கரவர்த்தி

    No comments