• Breaking News

    பொன்னேரி அருகே தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தங்களது ஊராட்சியை அருகில் உள்ள நகராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு




    உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பொன்னேரி அருகே உள்ள தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை பொன்னேரி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தை மக்கள் புறக்கணித்தனர். இதனையடுத்து மே 1ம் தேதி ரத்து செய்யப்பட்ட சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கிலிமேடு கிராமத்தில் தனி அலுவலர் முன்னிலையில் நடைபெற்றது.  


    ஊராட்சியை அருகிலுள்ள நகராட்சியுடன் இணைப்பதால் 100நாள் வேலை திட்டம் பறிபோகும் அபாயம், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவை பன்மடங்கு உயரும் என்பதால் இன்றும் கிராம மக்கள் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கூடாது எனவும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் அப்போது கேட்டுக் கொண்டனர்.



    No comments