திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நூலகத்திற்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, நூல்களின் இருப்பு மற்றும் நூல்களின் தேவை போன்றைவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அங்கு பயிலும் மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட நூலகங்களின் ஆய்வாளர் வள்ளி,மாநகராட்சி நகர் நல அலுவலர் ராம்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

0 Comments