எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு முடிச்சூரில் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Wednesday, May 14, 2025

எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு முடிச்சூரில் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது



செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை மேற்கு ஒன்றிய முடிச்சூர் ஊராட்சியில் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி யார் அவர்களின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம்.பி.மனோகரன் தலைமையில் நடைபெற்றது.

இது சிறப்பு அழைப்பாளராக கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சீதா செல்ல பாண்டியன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நாவலூர் முத்து, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற தலைவர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா ஆகியோர் கலந்து கொண்டு பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

 பின்னர் அனைவருக்கும் நல திட்ட உதவி வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி முடிச்சூர் 8வது வார்டு உறுப்பினர் ஏ.அருள், பரங்கிமலை மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் முடிச்சூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சசிகலா கல்கி, பரங்கிமலை மேற்கு ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் 11வது வார்டு கிளைக் கழகச் செயலாளர் டி.வி.ஆர் வெங்கட்ராமன் மற்றும் கிளை கழக செயலாளர் மகளிர் அணி நிர்வாகிகள் பிற அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment