செங்கல்பட்டு: தேமுதிக பகுதி கழக செயலாளர் வின்சென்ட் சைலஜா இல்ல புது நன்மை விழாவில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு - MAKKAL NERAM

Breaking

Saturday, May 10, 2025

செங்கல்பட்டு: தேமுதிக பகுதி கழக செயலாளர் வின்சென்ட் சைலஜா இல்ல புது நன்மை விழாவில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு


செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பம்மல் சி.எஸ்.ஐ.கன்வென்ஷன் வளாகத்தில் தேமுதிக பம்மல் வடக்கு பகுதி கழக செயலாளர் வின்சென்ட் சைலஜா அவர்களின் இல்ல புது நன்மை விழா செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினருமான அனகை முருகேசன் அவர்கள் தலைமையில் வின்சென்ட் சைலஜா அவர்களின் இரு குழந்தைகள் ஆன மேனியில் மெக்காலம் என்ற ரித்திக். விஜயராஜ் என்ற ஆண்டனி அவர்களை வாழ்த்த சிறப்பு அழைப்பாளராக தேமுதிக கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வருக தந்த போது மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடிக்கப்பட்டு தீப்பந்தங்கள் சூழற்றப்பட்டு மகளிர்கள் கழக கொடி ஏந்தி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு பின்னர். இரு குழந்தைகளையும் மலர் கொத்து கொடுத்து வாழ்வாங்கு வாழ்த்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் மா.செழியன், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் பம்மல் ராஜ், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் எம்.ஜி.மூர்த்தி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் பாத்திமா ஸ்டெல்லா, பகுதி செயலாளர் கேட் எம்.தர்மா, கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தி சென்றனர்.

No comments:

Post a Comment