ஆப்ரேஷன் சிந்தூர்..... பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட இழப்புக்கு அவர்களே முழு பொறுப்பு..... ஏர் மார்ஷல் ஏகே பாரதி - MAKKAL NERAM

Breaking

Tuesday, May 13, 2025

ஆப்ரேஷன் சிந்தூர்..... பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட இழப்புக்கு அவர்களே முழு பொறுப்பு..... ஏர் மார்ஷல் ஏகே பாரதி

 



ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் வெற்றி பெற்றது தொடர்பாக இந்திய முப்படைகளின் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஏர் மார்ஷல் பாரதி பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியா முறியடித்தது பற்றி கூறினார். அவர் கூறியதாவது “இந்தியா ஆயுதப்படைகளின் தாக்குதல் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக இல்லை. பயங்கரவாதிகளை அழிப்பதற்காகவும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து வரும் நெட்வொர்க் அமைப்புகளை அழிப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட தாகும்” என்று கூறினார்.

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது பாகிஸ்தானில் அமைந்துள்ள அணு உற்பத்தி ஆலை சேதமடைந்ததாக வீடியோ ஒன்றை ஆயுதப்படைகள் வெளியிட்டது. அதைப் பற்றி பேசிய மார்ஷல் ஏ.கே.பாரதி, “பாகிஸ்தான் தாக்குதல் நடத்தவும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கவும் முடிவு செய்ததால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க ப்பட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு அவர்கள் தான் முழு பொறுப்பு” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment