செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பெருங்களத்தூரில் உள்ள ஜி.கே.எம் கல்வி குழுமம் மற்றும் ஸ்ரீ ஐயகிரீவர் செஸ் அகாடமி சார்பில் முதலாவது மாநில அளவிலான சதுரங்க போட்டி GKM கல்லூரியில் நடைபெற்றது. சதுரங்க போட்டியில் 8 , 10, 13, 25 வயது கொண்ட ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே நடைபெற்ற இப்போட்டிகள் மொத்தம் 6 சுற்றுகளாக நடைபெற்றன. செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம். திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், விருதாசலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி என தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
சதுரங்க விளையாட்டில் அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவிலும் முதல் 30 இடங்களை பிடித்த வீரர்கள் , வீராங்கனைகள் என மொத்தம் 240 பேர்களுக்கு வெற்றி கோப்பைகளையும் , சான்றிதழ்களையும் ஜி.கே.எம் கல்லூரி முதல்வர் டாக்டர் புவனேஷ்வரி, துணை முதல்வர் டாக்டர் வெங்கடேன் , ஸ்ரீ ஐயகிரீவர் செஸ் அகாடமி நிறுவனர் கோகிலா ராஜேஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
8 வயதுடைய இளம் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்கள் அனைவருக்கும் வெற்றி பதக்கங்கள் வழங்கபட்டன.
மேலும் இந்த பரிசளிப்பு விழாவில் பெற்றோர்கள், மாணவர்கள், ஜி.கே.எம். கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள், செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க கழக நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை குறிப்பாக பேருந்து , உணவு மற்றும் அடிப்படை வசதிகளை ஜி.கே.எம். கல்லூரி நிர்வாகம் மற்றும் ஸ்ரீ ஐயகிரீவர் செஸ் அகாடமி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

0 Comments