டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கு..... சீமானுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை..... - MAKKAL NERAM

Breaking

Thursday, May 15, 2025

டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கு..... சீமானுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை.....


 நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் அவதூறு பரப்பியதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் வருண்குமார் ஐபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த வழக்கில் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வருண்குமார் ஐபிஎஸ் மட்டும் நேரில் ஆஜரானார். ஆனால் சீமான்  ஆஜராகவில்லை. கடந்தமுறை விசாரணையின் போது வழக்கில் முறையாக ஆஜராவேன் என்று கூறிவிட்டு சென்றீர்களே. இப்படி இருக்கையில் இன்று ஏன் ஆஜராகவில்லை என சீமான் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். 

மேலும் இதுவே கடைசி வாய்ப்பு என நீதிபதி எச்சரித்த நிலையில் அடுத்த முறை அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக விடில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment