• Breaking News

    நம்பியூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..... பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்......



    ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியத்தில் நம்பியூர் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு முன்னால் அரசு வழக்கறிஞர் கங்காதரன் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் நம்பியூர் பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.அதனைத் தொடர்ந்து நம்பியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு ரொட்டி ,பால், பழங்கள் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி தலைவர் ர.மணிகண்ட மூர்த்தி,நம்பியூர் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆண்டி காடு சரவணன்,எலத்தூர் ஜெயலலிதா பேரவை செயலாளர் கதிர்வேல்,திவாகரன், வி.சி.குமார்,யோகா பழனிச்சாமி, மாரிமுத்து, தவமணி,அருண்குமார், கிருபாகரன், மொட்டணம் மயில்சாமி, பத்தாவது வார்டு செயலாளர் சண்முகம் என்கிற சதீஷ், ஆனந்த், 5வது வார்டு செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

    No comments