பெத்தநாடார்பட்டியில் வெள்ளி விழா ஆண்டு ரத்த தான முகாம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Saturday, May 17, 2025

பெத்தநாடார்பட்டியில் வெள்ளி விழா ஆண்டு ரத்த தான முகாம் நடைபெற்றது


பெத்தநாடார்பட்டியில் வெள்ளி விழா ஆண்டு ரத்த தான முகாம் நடைபெற்றது, இதில் அதிக முறை ரத்ததானம் வழங்கிய 15 பேருக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது.

பாவூர்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடார்பட்டியில் தென்காசி அரசு ரத்த தான வங்கி, நண்பர்கள் ரத்ததான குழு, அசத்தல் ரத்ததான கழகம், விக்னேஸ்வரா ஜுவல்லரி இணைந்து நடத்திய வெள்ளி விழா ஆண்டு ரத்த தான முகாம் நடைபெற்றது. மருத்துவர் தங்கபாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவன்நாடார் முன்னிலை வகித்தார்.

 நண்பர்கள் ரத்த தான குழு வைத்திலிங்கம் வரவேற்றார். அரசு மருத்துவமனை மருத்துவர் நிர்மல் முகாமினை தொடங்கி வைத்தார். மருத்துவர் குணசேகரன் ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து பேசினார். 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 25 ஆண்டுகளில் 20 முறைக்கு மேல் ரத்த தானம் வழங்கிய 15 பேரை கௌரவிக்கம் வகையில், வெள்ளி பதக்கத்தினை விக்னேஷ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் டிரஸ்ட் திருமாறன், கண் தான விழிப்புணர்வு குழு நிறுவனர் கே.ஆர்.பி.இளங்கோ, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீமூலநாதன், ஊராட்சி செயலர் சௌந்தர், நிலவன் வேல்சாமி, வில்சன் அருளானந்தன், மனோகர், அண்ணாமலைகுமார், கோகிலன், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுமன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment