• Breaking News

    நாகை: வேளாண் கல்லூரி மாணவர்கள் விதைநேர்த்தி குறித்த செயல்விளக்கம்

     


    நாகை, தலைஞாயிறு அருகே நாலுவேதபதியில் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்கள் (தரீஷ், பாலாஜி ஷங்கர்,சந்துரு, ஹரிகிஷோர்,ஜெயமுருகன்,சையத் பஷீர், மற்றும் யோக சீனிவாசன்) பருப்பு வகை பயிர்களில் நோய்த்தடுப்பு மற்றும் வளர்ச்சி ஊக்கத்திற்கு விதை நேர்த்தி செயலை சிறப்பாக மேற்கொண்டனர்.

     பச்சை பயறு,உளுந்து, துவரம் பருப்பு, கடலை  போன்ற பயிர்களுக்கு விதை நேர்த்தி செய்யப்பட்டது. இயற்கை நுண்ணுயிரான ட்ரைக்கோடெர்மா விரிடி தூளை பயன்படுத்தி, விதைகளின் ஆரம்ப நிலை நோய்களை தடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

     ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி தூளை சிறிது தண்ணீருடன் நன்கு கலந்து விதைகளின் மேல் பூசி, நிழலில் உலர்த்தி விதைப்பு நடத்தினர். இந்த முறையால் பூஞ்சை நோய்கள், வேர் அழுகல் மற்றும் மண்வழி பரவும் நோய்கள் தடுக்கப்படுவதாக மாணவர்கள் கூறினர். மேலும், விதைகளின் முளைச்சல் விகிதம் அதிகரித்து பயிர்களின் ஆரம்ப வளர்ச்சி உறுதியடையும் என்றும் தெரிவித்தனர்.

    No comments