சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு - MAKKAL NERAM

Breaking

Wednesday, May 28, 2025

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு

 


தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. அதேவேளை, வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை மறைமலை நகர் பகுதியை சேர்ந்த மோகன் (வயது 60) என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு பல்வேறு இணை நோய் பாதிப்புகள் இருந்த நிலையில் அதற்கும் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

No comments:

Post a Comment