நாகை: வேளாண் மாணவர்கள் நெற்பயிரில் விதை நேர்த்தி குறித்த செயல்முறை விளக்கம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, May 6, 2025

நாகை: வேளாண் மாணவர்கள் நெற்பயிரில் விதை நேர்த்தி குறித்த செயல்முறை விளக்கம்


நாகை மாவட்டம்,தலைஞாயிறு பகுதியில் கீழ்வேளூர் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு நெற்பயிரில் விதை நேர்த்தி செய்தல் குறித்த செயல்முறை விளக்கம் அளித்தனர்‌. 

இந்நிகழ்வில் நெற்பயிரில் விதை நேர்த்தி செய்வதன் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. மேலும்  நெற்பயிரில் விதை நேர்த்திக்கு பயன்படும் பல்வேறு முறைகளை எடுத்துறைத்ததோடு ,  உயிரி உரம் மூலம் விதை நேர்த்தி செய்வதன் வழிமுறைகளை செய்து காட்டினர். உயிரி உரமான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா பயன்படுத்தி விதை நேர்த்தி செய்வதன் மூலம் பயிரின் மகசூல் 30 % வரை அதிகரிப்பதோடு , பயிரின் வளர்ச்சி மற்றும் மண்ணின் தரம் மேம்படும் என எடுத்துக் கூறினர். 

மேலும் KCl கோண்டு விதை நேர்த்தி செய்வதன் மூலம் பயிருக்கு வறட்சி மற்றும் பிற சுற்றுச்சூழல் அழுத்தங்களை தாங்கி வளர உதவும். இந்நிகழ்வில் பங்கேற்ற  விவசாயிகள் மாணவர்களின் இம்முயற்சியை பெரிதும் ஆதரிப்பதோடு , இம்முறைகளை தாங்களும் பயன்படுத்த ஆர்வமோடு உள்ளதாக தெரிவித்தனர்‌.

No comments:

Post a Comment