நாகூரை அடுத்த தெத்தி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு டாக்டர் அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பு
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த தெத்தி ஊராட்சி கீழத்தெருவில் இன்று மே ஒன்றாம் தேதியாம் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலையை விடுதலை சிறுத்தை கட்சியின் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நாக. அருட்செல்வன் திறந்து வைத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். விழாவில் முன்னதாக விசிக கட்சி கொடியினை ஏற்றி கோஷமிட்டனர். பிறகு நூலகம் மற்றும் சமுதாய பொது சேவை இயக்ககத்தில் டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் புகழ் பற்றியும், அவரது வாழ்க்கை வரலாறு பற்றியும் எதிர்கால மாணவனுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என பெருமிதம் கொண்டு பேசினார்.
இந்நிகழ்வில் நாகை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் எம்.ராமலிங்கம், தெத்தி அரவிந்த், மூவேந்தனர், முகாம் பொறுப்பாளர்கள் கண்ணதாசன், வேம்பையன், சமூக ஆர்வலர் ஜாகிர் உசேன், விசிக வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் நாகூர் சுபாஷ்,நாகூர் வாகை நிலவன்,.ஜாஹிர், சாதிக் மற்றும் அஜித்குமார், மனோவளவன், ராஜா, சூர்யா, கார்த்தி, ஈஸ்வரன், அரவிந்த்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்: ஜி.சக்கரவர்த்தி
No comments