நம்பியூர் ஸ்ரீ ஐய்யனார் கோவிலில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Tuesday, May 13, 2025

நம்பியூர் ஸ்ரீ ஐய்யனார் கோவிலில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது



ஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில்  பழமை வாய்ந்த ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில் சித்ரா பௌவுர்ணமியை  முன்னிட்டு  சிறப்பு  தோற்றத்தில் ஸ்ரீ ஐய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐய்யனாரை தரிசித்துச் சென்றனர். 

அதைத்தொடர்ந்து ஸ்ரீ ஐய்யனாருக்கு  அபிஷேகம் செய்த பிரசாதம், பானகம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாட்டினை கோயில் தர்மகர்த்தா லோகு  செய்திருந்தார்.

 மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment