இன்றைய ராசிபலன் 08-06-2025
மேஷம் ராசிபலன்
இன்றைய சூழலில், ‘உடலின் நச்சுக்களை சுத்திகரித்தல்’ என்பது நீங்கள் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று ஆகும். சில காலமாக, உங்களது உடல் நலனைப் புறக்கணித்து வருகிறீர்கள். உங்களது உடல்நலம் சார்ந்த விஷயங்கள் முன்னுரிமைப் பட்டியலில் இல்லாத போதிலும், அதனைக் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். உங்களது உள்ளார்ந்த ஆர்வம், திறமை போன்றவற்றால் மற்றவர்களுக்கு என்ன நன்மை என்பதை கண்டறியுங்கள். இன்று, உங்களது மனதோடு உரையாட பயப்பட வேண்டாம். உங்களிடம் சில நல்ல புத்தாக்க யோசனைகள் உள்ளன. அதைச் செய்வதற்கான தைரியத்தை நீங்கள் வரவழைக்க வேண்டும்.
ரிஷபம் ராசிபலன்
நீங்கள் எதைச் செய்தாலும் அதில் கவனம் செலுத்துகிறீர்கள். உங்கள் இலக்குகளை அடைவதில் கவனம் செலுத்த கற்றுக் கொள்வதுடன், நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. அற்பமான விஷயங்களை ஒதுக்கி வைத்து, முக்கியமானவற்றில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம். நீங்கள் சிலர் மீது கடும் கோபத்தில் இருக்கிறீர்கள். உங்கள் பொறுமையைச் சோதிக்கும் நேரம் இதுவாகும். நீங்கள் அமைதியான மனதுடன் சிந்திப்பது நல்லது. உங்களைச் சிக்கலில் ஆழ்த்த விரும்பும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
மிதுனம் ராசிபலன்
உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். உள்ளுணர்வு உங்கள் மனதை நல்ல செயல்படும் வகையில் மாற்றி, உங்கள் வாழ்க்கையில் உயர உதவும், புதிய விருப்பங்களை ஆராயுங்கள். நோக்கங்கள் நன்றாக இருந்தாலும் விமர்சங்கள் எழும் என்பதால் அவற்றை நீங்கள் வெறுக்கிறீர்கள். புதிய யோசனைகளைக் கனிவாக ஏற்றுக் கொள்ளுங்கள். யாருக்குத் தெரியும், இது உங்களுக்குப் பிறகு ஏற்பட்டு இருந்த பெரிய இடைவெளியை முடிவுக்குக் கொண்டு வரலாம், ஆரோக்கியமற்ற உணவு முறை உங்கள் ஆரோக்கியத்தைப் பாதித்துள்ளது. நீங்கள் ஆரோக்கியமான ஒரு புதிய உணவுகளை உட்கொள்ள வேண்டிய நேரம் இது.
கடகம் ராசிபலன்
பணம் மிகவும் முக்கியம். ஆனால், நீங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துவது பணத்தை விட முக்கியமானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுங்கள். ஆனால், உங்களைப் பயன்படுத்திக் கொள்ளமுயல்பவர்களிடமிருந்துவிலகியே இருங்கள். இதுபற்றி, அவ்வப்போது சிந்திக்க வேண்டாம். அதிகப்படியான சிந்தனையில் கவனம் செலுத்துவதற்கு முன்பு, அதற்கானதிட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். இன்று உங்கள் உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் பிற அன்புக்குரியவர்களிடம் அன்புடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் இந்த நிலையில் இருப்பதற்கு அவர்கள் உங்களுக்கு உதவியிருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய நேரம் இது.
சிம்மம் ராசிபலன்
மற்றவர்கள் உங்களைஆலோசனைகளைக்கேட்டுக் கொள்வார்கள். உங்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி பெருமை கொள்ளாதீர்கள். இது நீங்களேஉங்களைப்புத்திசாலித்தனமாகத்தோன்றச் செய்யலாம். இன்று உங்கள் கோபத்தையும் மன அழுத்தத்தையும்கட்டுப்படுத்தவேண்டும். உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். மற்றவர்கள் வருத்தப்படக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். உங்களது ஆர்வத்தை மீண்டும் தூண்டக்கூடிய புதிய முயற்சிகளைப்பற்றிப்பேசுங்கள். புதிய மற்றும் சவாலான முயற்சிகளுடன் நீங்கள் முன்னேற விரும்பினால், அதற்கு ஏற்ற வழியில்பயணிக்கத்தொடங்குங்கள்.
கன்னி ராசிபலன்
உங்கள் வாழ்க்கையிலும், உங்களுக்கு நெருக்கமானவர்களின் வாழ்க்கையிலும் நீங்கள் நிறையத் தாக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள். நீங்கள் நேர்மறையான மற்றும் மேம்பட்ட விஷயங்களைச் செய்ய வேண்டும் என முடிவு செய்யுங்கள். இது உங்கள் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்த நாளில் நீங்கள் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உணர்கிறீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் சிறந்த நட்புறவில் இருப்பீர்கள். உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள், உங்களுக்குச் சாதகமாகவே செயல்படுகின்றன. இந்த நாளில் பல விஷயங்கள் நீங்கள் நினைத்தபடி நடக்கும். மீண்டும் உங்கள் யோசனைகளைப் பெறுவதற்கும், படைப்பாற்றலைத் தூண்டுவதற்கும், பழைய கூட்டணிகளை புதுப்பியுங்கள்.
துலாம் ராசிபலன்
உடனடி கவனம் தேவைப்படும் வகையில், உங்களது வீட்டில் சில விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. இது போன்ற சில விஷயங்கள் மிக மோசமான நிலைக்குத் திருப்புவதற்கு முன்பு, நீங்கள் அவற்றை விரைவாகச் சமாளிக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது. ஒரு சிறந்த பந்தம் பற்றிய உங்களது புரிதலானது நடைமுறைக்கு அப்பால் உள்ளது. உண்மைக்குப் புறம்பாக இருப்பது, உங்களை விரக்தியடையச் செய்யும். இது உண்மையான அன்பில் நம்பிக்கையை இழக்கச்செய்யும்.
விருச்சிகம் ராசிபலன்
உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் இன்று உங்களுக்குச் சிறப்புக் கவனம் தேவைப்படும். உங்கள் சொந்த பிரச்சினைகளைக் கையாளாமல் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நீங்கள் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். மன அழுத்தம் உங்களை உயிருடன் கொலை செய்யும் முன்பு, உங்கள் உள் மனதில் உண்டாகும் தீய எண்ணங்களைக் கட்டுப்படுத்திச் சமாளிக்க வேண்டும். உங்களது நிதி நிலை பெரிய சிக்கலில் உள்ளது. ஆனால், இந்த சிக்கல் விரைவில் பாதுகாப்பான நிலைக்கு வந்து விடும் என்று உங்கள் மனதை உற்சாகப்படுத்துங்கள்.
தனுசு ராசிபலன்
உங்கள் நிதி நிலை பாதிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. அதைச் சரி செய்வதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். மனதில் தோன்றும் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கவும். அப்படி தேவையற்ற வாங்கி செலவு செய்தால், நீங்கள் மாத இறுதியில் வருத்தப்பட வேண்டியிருக்கும். வாழ்க்கை உங்களைச் சோர்வடையச் செய்து விட்டதாகவும், அதே நேரத்தில் நீங்கள் நிறைய விஷயங்களை எதிர்த்துப் போராடுவதாகவும் உணர்கிறீர்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்துங்கள். உங்கள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகளைப் பெறுவீர்கள். ஓய்வெடுக்கவும் அல்லது வாழ்க்கையின் இன்பங்களைப் பெற்றிடத் தினமும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்களுக்கு உண்மையில் தேவையில்லாத விஷயங்களுக்காக அதிக செலவு செய்ய வேண்டாம்.
மகரம் ராசிபலன்
இன்று, சிறியதும், இனிமையானதுமான சொர்க்கமாக உங்களது வீடுதான் இருக்கிறது. ஆசீர்வாதத்தின் மறு உருவமாக அந்த குடும்பம் இருக்கும். இன்று, நீங்கள் அதை உணர்வீர்கள். நிதி சம்மந்தமான விஷயங்களைப் பொறுத்தவரையில், விஷயங்கள் ஒளிமயமாகத் தெரிகின்றன. உங்களின் மனக்கிளர்ச்சியானது உச்சத்தில் இருக்கும். நீங்கள் விரைவாக பேசுவீர்கள். தீர்க்கமான முடிவுகளுக்கு விரைவாகச் செல்வீர்கள். சிக்கலில் ஆழ்வதற்கு முன்பாகவே, உங்களை நீங்களே வேகப்படுத்திக் கொள்ளுங்கள்.
கும்பம் ராசிபலன்
நீங்கள் நிறைவற்ற வேண்டிய விஷயங்களின் பட்டியலைப் பற்றி அதிகமாக கவலைப்படாமல், இந்த நாளை மிகச்சிறப்பாகப் பயன்படுத்தி ஒவ்வொன்றாக விஷயங்களைச் செய்யத் தொடங்குங்கள். உங்கள் அடுத்த நகர்வை முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம், மனஅழுத்தத்தைத் தவிர்த்திடுங்கள். இன்று, உங்களது முடிவுகள் நீங்கள் எதிர்பார்த்ததை விட சீக்கிரம் வரவில்லை என்று நீங்கள் உணரும் போது, பொறுமையிழந்து இருப்பதால் மட்டுமே உங்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருவேளை, உங்களுக்கு வெற்றி மெதுவாக கிடைதாலும், அந்த வெற்றி பத்து மடங்கு இனிமையானதாக அமையும்.
மீனம் ராசிபலன்
மந்தமான தன்மை உங்களை ஆட்கொண்டுள்ளது. அது உங்கள் செயல்களைப் பாதிக்கும். இடைவிடாமல் வேலை செய்வது உங்களைச் சோர்வடையச் செய்துள்ளது. கற்பனைத் துறையில் இருப்பவர்கள், தங்கள் எண்ணங்களின் பெரும் சுணக்கம் இருப்பதைப் போலவும், மந்தமானதாகவும் உணரலாம். உங்கள் அனுபவத்தை மீண்டும் அடைய உங்களுக்கு என்ன தேவை. இதற்காக உற்சாகமூட்டும் ஒன்றைச் செய்யுங்கள் அல்லது உங்கள் கற்பனைகளில் ஆழ்ந்து யோசியுங்கள். இது உங்களுக்கு இப்போது அவசியம் தேவை. இதன் மூலம் நீங்கள் அதிக பயன் பெறுவீர்கள்.
No comments