ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு 1900..... அரசின் திட்டங்களை பெறுவதில் சிக்கல்..... மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை..... - MAKKAL NERAM

Breaking

Monday, June 9, 2025

ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு 1900..... அரசின் திட்டங்களை பெறுவதில் சிக்கல்..... மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.....

 


ஈரோடு மாவட்டம் அரையப்பாளையத்தை அடுத்த புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(32) என்ற பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவர் பிறந்த வருடம் 1993. ஆனால் அந்த பெண்ணின் ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு 1900 என பதிவாகி இருப்பதால் அரசின் திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

ஆதார் திருத்தம் செய்யும் மையங்களில் வருடத்தை திருத்தம் செய்வதற்கு பிறப்பு சான்றிதழ் கேட்டுள்ளனர். ஆனால் பழங்குடியின பெண்ணான மகேஷுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாததால் ஆதாரில் திருத்தம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் என்ன செய்வது என்று அறியாமல் தவிக்கும் மகேஷ் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆதாரில் திருத்தம் செய்ய உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment