• Breaking News

    2026ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்..... பொன்னேரியில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு


    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி நகரத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் தலைமையில் நடைபெற்றது. .அவைத்தலைவர் பகலவன் நிர்வாகிகள் மூர்த்தி, கதிரவன், உமா மகேஸ்வரி, சி.எச். சேகர் ,கே ஜி பாஸ்கர் சுந்தரம் ,பா.செ. குணசேகரன். டாக்டர் பரிமளம் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர் பொன்னேரி நகர மன்ற தலைவர் வழக்கறிஞர் ரவிக்குமார் அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் , சிறுபான்மை துறை அமைச்சர் ஆவடி சாமு. ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். அமைச்சர் கோவை செழியன் பேசியதாவது.. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக எழுச்சியோடு உள்ளது , மோடி ஆட்சி தமிழகத்தை வஞ்சிக்கிறது, ஓர வஞ்சனையோடு பார்க்கிறது எனவும், முதலமைச்சர் ஸ்டாலின் தாயுள்ளத்தோடு பார்க்கிறார்.

    சிறுபான்மை மக்களுக்கு தமிழ்நாடு தான் பாதுகாப்பு அரண் எனவும் எடப்பாடி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், பழனிக்கே.பால் காவடி எடுத்தாலும் 2026ல் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தான் ., 2026-இல் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்  சைதை சாதிக், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆ ராஜா, ஆனந்தகுமார் ,சக்திவேல், கே வி ஆனந்தகுமார், ஜான் என்கிற பொன்னுசாமி, சந்திரசேகர் ,ஜெகதீசன், செல்வசேகரன் ,முரளிதரன், உதயசூரியன் ,மணிபாலன் பரிமளம், பழவை முகமது அலவி, மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன் , ஆரணி முத்து அத்திப்பட்டு கதிர்வேல்.பொன்னேரி இளைஞர் அணி தீபன் ராமலிங்கம் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றியக்கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்.

    No comments