இன்றைய ராசிபலன் 25-06-2025
மேஷம் ராசிபலன்
இன்று உங்கள் மனநிலையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். கனிவான வார்த்தைகளைப் பேசுங்கள், அது உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்வதுடன், எந்த விரும்பத்தகாத நிலைக்கும் உங்களைக் கொண்டு செல்லாது. உங்கள் நண்பர் அல்லது குடும்பத்தினருடன் அன்பாகப் பேச வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடினமான காலங்களில்தான் நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டும். உங்கள் நெருங்கிய நண்பருக்கு இந்த நாளில் உங்கள் உதவி தேவைப்படும். அவர்களிடம் நீங்கள் பேசும் வார்த்தைகள், அவர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ரிஷபம் ராசிபலன்
சிலரைப் பார்த்தவுடன் கடும் கோபம் கொண்டு அவர்களைத் திட்டி விட நீங்கள் நினைப்பீர்கள். உங்கள் பொறுமையைச் சோதிக்கும் நேரம் இதுவாகும். இந்த நேரத்தில் நீங்கள் அமைதியான மற்றும் விவேகமான மனதுடன் சிந்திப்பது நல்லது. புதிய நண்பர்களுடன் பழக உங்களுக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் புதிய நட்பை உருவாக்க விரும்பினால், உடனுக்குடன் கோபம் கொள்ளும் உங்கள் சுபாவத்தை பின்னுக்குத் தள்ளி விட வேண்டும். உங்களுடன் தொடர்பில் இல்லாத நீங்கள் விரும்பும் நபரைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசுங்கள்.
மிதுனம் ராசிபலன்
இன்றைய உங்களது பொறுப்புகளிலிருந்து தப்பிச் செல்வதற்கு முயற்சிக்காதீர்கள். சிலரின் ஒத்துழைப்பைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் மற்றவர்களை கையாளும் திறன்களால், இதனை நிறைவேற்றுவது முற்றிலும் சாத்தியமற்றதல்ல. கடந்த காலங்களிலேயே, நீங்கள் தோல்விகளை பெற்றிருக்கிறீர்கள். ஆனாலும், உங்களின் சமீபத்திய தோல்வியுடன் எதனையும் ஒப்பிடமுடியாது என்று நினைக்கிறீர்கள். ஆகையால், நீங்கள் நீங்களாகவே சாதாரணமாக இருப்பதற்கு, உங்களோடு உரையாடுங்கள்.
கடகம் ராசிபலன்
நீங்கள் ஒரு ஆகச்சிறந்த படைப்பாக்க வாதி. எனவே, நீங்கள் அந்த திறமைகளை உலகிற்குக் காட்ட வேண்டிய நேரம் இது. எனவே, அவற்றைச் சரி செய்து கொள்ளுங்கள். அனைவரையும் நேசிக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அப்படி நேசிக்க முடிந்தால், அது நல்லது. உங்கள் 'அற்புதமான' யோசனையில் சந்தேகம் வரும் போது, உங்கள் முன்னேற்றத்தை மனதில் கொண்டு செயல்படுங்கள். வெறுப்பு உங்கள் கோபத்தை அதிகரித்து விடலாம். ஆனாலும், மற்றவர்கள் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும். அவர்களின் யோசனைகளில் உங்களுக்கு உதவக்கூடிய சில எண்ணங்களைப் பெறக்கூடும்.
சிம்மம் ராசிபலன்
புதிய பேச்சுக்கள், யோசனைகள் மற்றும் கருத்துக்களுக்கு உங்கள் மனதைத் திறந்து தயாராக வைத்திருங்கள். ஏற்கனவே முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட வழிகள் மன அழுத்தமில்லாமல் இலகுவாக இருக்கலாம். ஆனாலும், அவை பழைய முடிவுகளை மட்டுமே தரும். உங்கள் அன்புக்குரியவர்களும், எதிர்பாராத சிலநபர்களும் உங்களது நாளை பிரகாசமாக்குவார்கள். இது, நீங்கள் நேசிக்கப்படுவதாகவும், பாராட்டப்படுவதாகவும் உங்களை உணர வைக்கும். உங்களது யோசனைகளை உங்களின் தொழில்முறை அட்டவணையில் முன்வையுங்கள். ஏனெனில், இன்று, அவை நேர்மறையான கண்ணோட்டத்தோடு பார்க்கப்படலாம்.
கன்னி ராசிபலன்
சிறு ஆலோசனைகளைப் பெறுவது எப்போதும் தேவையாகிறது. ஏனெனில், இவை உங்களை ஒருபோதும் வலுவற்றவராக மாற்றப்போவதில்லை. உங்களுக்கு உதவி தேவை என்று மற்றவர்கள் நினைப்பதை நீங்கள் வெறுக்கிறீர்கள். இது நீங்களும் அறிவானவர் தான் என்ற ஒரு உணர்வினை சற்றும் குறைக்காது. சிலநேரங்களில், வலுவான மனம் கொண்டவர்களுக்குக் கூட, ஆலோசனைகள் தேவைப்படுகிறது. உங்களிடம் ஆலோசனை சார்ந்த உதவிகளுக்காக வருபவர்களிடம், இது உங்களுக்கு தேவையற்றது என்று கருதி அவர்களை மறுக்கக்கூடாது. நீங்களும் இப்படி கேட்கும் நேரம் இல்லாமலா போய்விடும்? ஆகையால், நீங்கள் அவர்களுக்கு உதவும் போது, அது வேறுவழியில் உங்களுக்கு உதவியாக வந்தடையும். இதனை, முயற்சி செய்ய தவற வேண்டாம்!
துலாம் ராசிபலன்
நீங்கள் இன்று கடும் போட்டியின் நடுவே இருக்கிறீர்கள். கடந்த காலங்களின் அனைத்து இன்னல்களையும் மாற்ற, ஒரு திட்டத்தை நீங்கள் வகுக்க வேண்டும். உங்களது நெருங்கிய நண்பர் ஒருவர் உங்களை உற்சாகப்படுத்திக் கொண்டே உங்கள் அருகில் இருப்பார். அவர்களுக்கு அன்பையும், பாராட்டையும் தெரிவியுங்கள்.
விருச்சிகம் ராசிபலன்
நீங்கள் வாழ்க்கை திருப்தியாக இல்லை என்று நீங்கள் உணர்கிறீர்களா? இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போன்று இல்லாமல், இப்போது வேலை மாற்றத்திற்கான சரியான நேரம். நீங்கள் செல்லும் பாதை குண்டும் குழியுமாக இருக்கலாம். ஆனால், அந்த மாற்றம் நிச்சயம் வெற்றியைக் கொண்டு வரும். கடந்தகால அன்பு, உங்களைச் சிறப்பாக மாற்ற உள்ளது. அந்த கெட்ட எண்ணங்கள், உங்களைச் சுற்றி, உங்கள் இயல்பான ஆற்றல்மிக்க உந்துதலைக் கெடுத்து விடக்கூடாது. சரியான பாதையில் சவால்களை எதிர் கொள்ளுங்கள். அது வெற்றிகரமாக மாறும்.
தனுசு ராசிபலன்
ஒருவேளை காற்றில் காதல் இருந்தால், மன்மதன் தனது அம்பை வீசத் தயாராக இருப்பார். ஆனால் இந்த முறை அவரது இலக்கு உங்கள் மீதாக இருக்கும் என்பதையும் நீங்கள் உறுதியாக நம்பலாம். நீங்கள் எதிர்பாராத இடத்தில் இந்த அன்பை உணர்வீர்கள். திருமணமானவர்களாக இருந்தால், நீங்கள் விரும்பும் நபர் மீதும் கொஞ்சம் அன்பை வெளிப்படுத்தத் தயங்க வேண்டாம். பொது இடங்களில் அன்பு பரிமாறப்படும் போது, உங்களுக்குப் பயம் கலந்த பதட்டத்தை உண்டாக்கலாம். ஆனாலும், வாழ்க்கையில் ஓய்வெடுக்கவும், வாழ்க்கை இனிமையான பக்கங்களுடன் மகிழ்ச்சி பூக்கும் வரை காத்திருக்கவும்.
மகரம் ராசிபலன்
வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையானதைப் பற்றி, நீங்கள் எப்போதாவது ஒரு யதார்த்தமான எதிர்பார்ப்பைப் பெற்றிருக்கிறீர்களா? அப்படி இல்லையென்றால், அது பற்றி இன்று சிந்திக்க வேண்டிய நேரம் இது. உங்களது பலத்தில் கவனம் செலுத்துங்கள், இன்று உங்கள் எதிர்பார்ப்புகளைப் பற்றித் தெளிவாகச் சிந்தியுங்கள். உங்கள் உறவுகளில் நிறைய ஏற்ற, இறக்கங்கள் உள்ளது. நீங்கள் சிறிய விஷயங்களை ஆழமாகத் தோண்டி பார்ப்பதை நிறுத்தி, விட்டுவிட வேண்டும். இன்று உங்கள் வாழ்க்கை போட்டி நிறைந்ததாக உள்ளது. வாழ்க்கையில் போட்டிக்கும், உறவுக்கும் இடையிலான நுட்பமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள நேரம் ஒதுக்குங்கள்.
கும்பம் ராசிபலன்
ஒரு நேர்மறையான நபரான நீங்கள், ஏதாவது ஒன்றை இழப்பதை உண்மையிலேயே வெறுக்கிறீர்கள். வாழ்க்கையைப் பொறுத்தவரைக்கும், நீங்கள் சிலசமயம் வெற்றி பெறுகிறீர்கள். சிலசமயம் தோல்வியுறுகிறீர்கள்! உங்களது வெற்றியோ அல்லது ஏதாவது ஒன்றை செயல்படுத்தும் உங்கள் செயலோ, உங்கள் திறன்களை தீர்மானிக்க விடவேண்டாம். உங்கள் ஆற்றலும், அழகும் இன்றைய சிக்கல்களை சரிசெய்ய உதவும். ஒருவேளை, நீங்கள் இதனை கடுமையாக எடுக்காவிட்டாலும், நீங்கள் இருதரப்பினருக்கு இடையே ஒரு மத்தியஸ்தராக செயல்பட வேண்டியிருக்கும். கவலை உண்மையில் உங்களை மென்மேலும் பயமுறுத்தியுள்ளது. எப்போதும் உங்கள் உற்சாகத்தைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். அதிகம் கவலைப்படுவதற்கும் அதன் மூலம் உங்கள் நாட்களை இழப்பதற்கும் பதிலாக, எந்த செயல்கள் நடந்தாலும் அவற்றைக் அதன் வழியிலே கையாள்வதைத் கற்றுக்கொள்ளுங்கள்.
மீனம் ராசிபலன்
உங்களது வேலையில், சிறு ஓய்வு மிகவும் உதவியாக இருக்கும். இது உங்களது மன அழுத்தத்தை சிறப்பாக நிர்வகிக்கவும், உங்களது வேலையில் சிறப்பாக கவனம் செலுத்தவும் உதவும். உங்களுக்கு நெருக்கமான ஒருவர் உங்களிடம் நம்பிக்கை வைப்பார். மேலும், அவர்களின் பிரச்சினைகளைக் காது கொடுத்து கேட்கும் போது, அவர்கள் தங்களது துயரங்களின் ஒரு பகுதியை சற்றே குறைத்துக்கொள்ளவும், இதயத்தை இலகுவாக மாற்றவும் உதவும். உங்களையும், உங்களுடைய அன்பையும் முன்னெப்போதையும் விட நெருக்கமாக ஏற்படுத்திக்கொள்வதற்கும், சில விஷயங்களை சீர்தூக்கி மேம்படுத்தவும், உங்களது அன்பான வார்த்தைகள் முக்கிய பங்கு வகிக்கும்.
No comments