சொத்துக்காக மகள்கள் மிரட்டல்..... ரூ.4 கோடி மதிப்பிலான சொத்தை கோவில் உண்டியலில் போட்ட தந்தை......


 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சொத்துக்காக 2 மகள்களும் தந்தையை மிரட்டி உள்ளனர். இதனால் அவர் வீட்டின் அருகே உள்ள ரேணுகாம்பாள் கோவிலில் ரூபாய் 4 கோடி மதிப்பிலான 2 வீட்டு பத்திரங்களை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

உண்டியல் எண்ணும் போது இதை கவனித்த அதிகாரிகள் அவரை அழைத்து விசாரித்தனர். இருப்பினும் இவ்வாறு உண்டியலில் பத்திரத்தை காணிக்கையாக செலுத்தினால் அது செல்லுபடி ஆகாது என்பதால் விரைவில் சொத்தை கோவில் பெயருக்கே மாற்றி எழுதி தருவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.இதுகுறித்து தந்தை விஜயன் கூறியதாவது, எனது மகள்கள் என்னை அப்பா என்றும் பார்க்கவில்லை.

 அதனால் அவர்களுக்கு இது தேவையில்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். இந்த சொத்துக்களை கோவிலில் காணிக்கையாக போட்டதை அறிந்த 2 மகள்களும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் கூறினார்.

Post a Comment

0 Comments