• Breaking News

    இன்றைய ராசிபலன் 28-06-2025

     


    Todays Tamil Rasi palam

    மேஷம் ராசிபலன்

    உங்கள் நிதி நிலை பாதிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. அதைச் சரி செய்வதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். மனதில் தோன்றும் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கவும். அப்படி தேவையற்ற வாங்கி செலவு செய்தால், நீங்கள் மாத இறுதியில் வருத்தப்பட வேண்டியிருக்கும். வாழ்க்கை உங்களைச் சோர்வடையச் செய்து விட்டதாகவும், அதே நேரத்தில் நீங்கள் நிறைய விஷயங்களை எதிர்த்துப் போராடுவதாகவும் உணர்கிறீர்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்துங்கள். உங்கள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகளைப் பெறுவீர்கள். ஓய்வெடுக்கவும் அல்லது வாழ்க்கையின் இன்பங்களைப் பெற்றிடத் தினமும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்களுக்கு உண்மையில் தேவையில்லாத விஷயங்களுக்காக அதிக செலவு செய்ய வேண்டாம்.

    Todays Tamil Rasi palam

    ரிஷபம் ராசிபலன்

    கடந்த நிகழ்ந்த விஷயங்கள் சீராக இல்லாமல் இருக்கலாம். உங்களை விடக் கடினமான காலங்களில் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்குக் கிடைத்த நல்ல விஷயங்களை எண்ணி நேர்மறையாகச் செயல்படுங்கள். விரைவில் உங்களைக் கஷ்டத்தில் ஆழ்த்தும் விஷயங்கள் மாறும். உங்கள் பலம் மற்றும் உங்கள் சமூக திறன்கள் புதிய வாய்ப்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும். அடுத்த சில நாட்களில் பயணங்கள் மற்றும் புதிய முயற்சிகளுக்கு நிறைய இடம் உள்ளது. உங்களைப் புத்துயிர் பெறச் செய்ய இது ஒரு நல்ல நேரம்.

    Todays Tamil Rasi palam

    மிதுனம் ராசிபலன்

    நண்பர்களுடன் வாழ்க்கையை அனுபவியுங்கள். இன்று, உங்களை சற்று தளர்த்திக் கொள்ளுங்கள். அது உங்கள் மனதை அமைதியாக வைக்க உதவும். உங்களிடம் உள்ள கடன் அட்டைகள் மூலம் துணிச்சலாகப் பொருட்களை வாங்கிக் கொள்வது எளிதாகிவிட்டது. ஆனால், இவ்வாறு பொருட்களை வாங்குவது, உங்கள் வரவு செலவைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கடன் அட்டை அறிக்கை, உங்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்துவதற்கு முன்பு அதில் உள்ள தவறுகளைச் சரி செய்து கொள்ளுங்கள். உங்களுடைய இந்த பொறுப்பற்ற செலவு பழக்கத்தைத் தூண்டும் நபர்கள் அல்லது சூழ்நிலைகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இவற்றிற்கு ‘இல்லை’ என்று சொல்வதைத் தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை.

    Todays Tamil Rasi palam

    கடகம் ராசிபலன்

    ஓயாமல் ரீங்காரமிடும் வண்டைப் போல, எதையாவது பேசிக்கொண்டே இருக்கும் அணுகுமுறை உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாது, மற்றவர்களின் தனியுரிமையை மதித்து நடந்து கொள்ளுங்கள். மற்றவர்களைப் பற்றி, தெளிவற்ற உள்ளுணர்ச்சி அல்லது வதந்திகளை நீங்கள் கேட்டால், அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். சந்தேகத்தின் பலனை நீங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர் நோய்வாய் பட்டு இருந்தால் அது உங்களுக்கு மனதில் கவலையை உண்டாக்கலாம். அவர்களைக் கவனித்துக் கொள்ளுங்கள், இப்போது உங்களது கவனிப்பு அவர்களுக்கு மிகவும் தேவைப்படும்.

    Todays Tamil Rasi palam

    சிம்மம் ராசிபலன்

    பணிவுடன் இருப்பது எல்லா நேரங்களிலும் உங்களுக்கு உதவாது. இது போன்ற விஷயங்களை நீங்கள் சொல்லும் போது, உங்களை விரும்பாதவர்களின் ஒத்துழைப்பைப் பெற முயற்சி செய்யுங்கள். அவர்களுக்குப் பிடித்தது போலப் பேசி, அவர்களது ஒத்துழைப்பைப் பெறலாம். வேலை விஷயங்களில் இன்று ஒரு சிறந்த நாளாக இருக்கும். உங்கள் யோசனைகள் விரைவில் அங்கீகரிக்கப்படும்! உங்கள் வாழ்க்கையில் உள்ள சில கெட்ட பழக்கங்களை நீங்கள் உண்மையில் நிறுத்தி விட விரும்புகிறீர்கள். அவற்றை நிறுத்தி விடுவது என்பது நீங்கள் நினைப்பதை விடக் கடினமாக இருக்கலாம். அதற்காக முயற்சியைக் கைவிட்டு விடாதீர்கள், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

    Todays Tamil Rasi palam

    கன்னி ராசிபலன்

    சவால்களை ஏற்றுக்கொண்டு, உங்களிடத்திலுள்ள மனோதிடத்தை வரவழையுங்கள். அப்போது, கடினமான பணிகளைச் செய்வதிலிருந்து நீங்கள் விலகமாட்டீர்கள். உங்களுக்குத் தேவைப்படும் போது, குடும்பத்தினரும், நண்பர்களும் உதவுவார்கள். நீங்கள் உங்களது உள்ளக் கிடக்கைகளை அங்கலாய்கும் போது, அவர்கள் உங்கள் பக்கமாக இருப்பார்கள். ஏதேனும் ஒன்றில் சிக்கிக்கொண்டதாக உணரும் போது, உங்கள் அகம்பாவத்தை விடுத்து, உதவி கேட்க தயாராக இருங்கள்.

    Todays Tamil Rasi palam

    துலாம் ராசிபலன்

    இன்று, நீங்கள் சலிப்படைந்தது போன்று உணர்கிறீர்களா? உங்கள் வாழ்வை எப்படி மேம்படுத்துவது என்று யோசித்து வருகிறீர்கள். இதை யோசிக்க இப்போதே சிறந்த நேரமாக இருக்கும். மற்றவர்களின் யோசனைகள் மற்றும் அவர்களின் அனுபவங்களை பயன்படுத்துவது உங்களுக்கு போதுமானதாக இருக்காது. உங்கள் மூளையை கசக்கி பிழிந்து, ஆழமாக யோசித்து, உங்களுக்கான யோசனையை தேர்ந்தெடுக்க வேண்டும். இது என்னால் முடியாது என்று சாக்குபோக்கு சொல்வது உங்களுக்கு எப்போதும் உதவாது. ஆகையால், இன்று உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான நேரம். எனவே, முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

    Todays Tamil Rasi palam

    விருச்சிகம் ராசிபலன்

    எப்போதும் நீங்கள் வேலையைப் பற்றியோ அல்லது விளையாட்டைப் பற்றியோ சிந்திப்பதில்தான் கவனம் செலுத்துகிறீர்கள். ஏதாவது ஒன்றை குறித்து மட்டுமே அதிதீவிரத்துடன் அணுகும் முறை ஆரோக்கியமான நடைமுறை அல்ல. மேலும், நீங்கள் உங்களது தற்போதைய வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதைக் கருத்தில் கொண்டு, அதை இன்னும் சமச்சீரானதாக மாற்ற வேண்டும். இன்றைய சூழலில், நீங்கள் ஏதாவது ஒன்றைப் பற்றிய உங்கள் மாறுபட்டக் கருத்தை கொண்டுள்ள போதோ அல்லது அதுபற்றி சந்தேகிக்கத் தொடங்கும் போதோ, நீங்கள் உங்கள் எண்ணங்களைப் போலவே வலிமையானவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே, இன்றைக்கே உடனடியாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. பின்பு, அவற்றிற்காக வருத்தப்படுவதை விட, இப்போதே செய்யுங்கள்.

    Todays Tamil Rasi palam

    தனுசு ராசிபலன்

    இது ஒரு அற்புதமான பயணத்திற்கான நேரம், எனவே அந்த பயணத்திற்குக் கொண்டு செல்லும் பையை வெளியே எடுங்கள். இதை சிறியதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பயணமானது எந்த ஒரு தொழிநுட்ப கருவிகளும் இல்லாத பயணமாக இருக்கட்டும்! இது நிச்சயமாக உங்களுக்கு வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்கும். மேலும், இது உங்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். உங்களது நீண்ட கால எதிரி உங்கள் உதவியை நாடுவார், அவருக்கு நீங்கள் உதவ வேண்டும். நீங்கள் செய்யும் உதவிகள் குறுகிய காலத்தில் உங்களுக்கு வெகுமதியைப் பெற்றுத் தரும்.

    Todays Tamil Rasi palam

    மகரம் ராசிபலன்

    இன்று மென்மையான மனதுடன் நடந்து கொள்வதுடன் மகிழ்ச்சியாக இருப்பதைத் தேர்வு செய்யுங்கள். எதிர்மறை எண்ணங்கள் இன்று உங்கள் மனதையும் இதயத்தையும் கடுமையாகப் பாதித்து விடக்கூடாது. இன்று மிகவும் பயனுள்ள விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இதனால், நீங்கள் செய்ய நிறைய விஷயங்கள் கிடைத்திருக்கும். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் நீங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் இயல்பான திறன்கள் மற்றும் திறமைகளைப் பற்றிப் பாராட்டு கிடைக்கச் செய்யும். புன்னகையுடன், நிதானமாக, புதிய யோசனைகளை மனதுடன் ஒன்றிணைக்க கற்றுக் கொள்ளுங்கள்.

    Todays Tamil Rasi palam

    கும்பம் ராசிபலன்

    உங்களது நிதிநிலை சீராக இல்லை. இந்த மாதத்திற்குள்ளாக நிலைமை சரியாகும் என்று நம்புகிறீர்கள். உங்களது பணம் செலவிடும் பழக்க வழக்கங்களைக் குறித்து கவனமாக இருங்கள். ஆடம்பரத்திற்கான உங்களது நாட்டத்திற்கு இன்று உகந்த நாளால்ல. பயனுள்ள பணிகளில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆனாலும், இன்று, தவறான தகவல்தொடர்புகள் அல்லது தவறான புரிதல்களை பற்றி கவலை கொள்ளாதீர்கள். உங்கள் நோக்கம் யாதெனில், சந்தேகங்கள் அல்லது அச்சங்கள் எப்போது, எப்படி ஏற்படுகின்றன என்பதை தெளிவுபடுத்துவதே ஆகும்.

    Todays Tamil Rasi palam

    மீனம் ராசிபலன்

    அவசர நெருக்கடி என்பது எப்போதும் ஒரு மோசமான விஷயம் அல்ல. உண்மையைச் சொல்லப் போனால், ஒரு சிறிய நெருக்கடியானது உங்களை சிறப்பாக கவனம் செலுத்தவும், மிகவும் தேவையான பொறுப்பினைப் பெறவும் உதவும். உங்களது எண்ணத்தில் எண்ணற்ற வசீகர சிந்தனைகள் உள்ளன. ஆனாலும் என்னவோ, உங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் போது, நீங்கள் நிறைய தடுமாறுகிறீர்கள். ஒருவேளை, நீங்கள் உண்மையிலேயே அதிக சிரத்தை செய்த நேரம் இதுவாகும். நீண்டகால பின்விளைவுகளை ஏற்படுத்தும் மிகவும் மோசமான ஒன்றைச் செய்வதற்கு முன்பாக, உங்களை நீங்களே சீர்படுத்திக் கொள்ளுங்கள்.

    No comments