ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி.... ரூ.50000 இழப்பீடு வழங்க உத்தரவு.... - MAKKAL NERAM

Breaking

Monday, June 9, 2025

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி.... ரூ.50000 இழப்பீடு வழங்க உத்தரவு....

 


சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி மறக்குமா நெஞ்சம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஒரே நேரத்தில் திறந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பலரும் உடைந்து சீட்டு இருந்தும் நிகழ்ச்சியை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதற்கு நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி நிறுவனம் விளக்கம் அளித்தது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியை காண முடியாதவர்களுக்கு நுழைவு கட்டடத்தை திருப்பி வழங்கியது.

இந்நிலையில் அர்ஜுன் என்பவர் அளித்த புகார் மனுவில் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை காண ரூ. 10 ஆயிரம் கொடுத்து டிக்கெட் பெற்றும், போக்குவரத்து நெரிசலால் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு ரூபாய் 50,000 இழப்பீடு வழங்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சென்னை வடக்கு மாவட்ட குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment