• Breaking News

    முடிச்சூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கிய மாவட்ட கழக செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன்

     


    செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பரங்கிமலை மேற்கு ஒன்றிய முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அதிமுக சார்பில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம்.பி.மனோகரன் தலைமையில் முடிச்சூர் ஸ்ரீ பாஸ்கர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம்.பி.மனோகரன், மறைமலைநகர் நகராட்சியின் முன்னாள் நகர‌மன்ற தலைவரும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக அம்மா பேரவை கழகச் செயலாளர் எம்.ஜி.கே.கோபி கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு வீடு வீடாக சென்று திமுக அரசின் அவலங்களை எடுத்துக் கூறி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் பொழிச்சலூர் பகுதி கழக செயலாளர் பாபு, மதனபுரம் பாக செயலாளர் செந்தில்குமார், கார்த்திக் பல்லவன் நகர் செயலாளர் ராஜா, மகளிர் அணி நிர்வாகிகள் லலிதா,  கற்பகம் சீனிவாசன், ஜோதிஸ்வரி, சரளா,  எஸ்.கலா, விஜயதாரணி, தேவிகா, கமலா, நிர்மலா மற்றும் முடிச்சூர் ஊராட்சி கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

    No comments