அகமதாபாத் புறப்பட்ட விமானம் மீண்டும் சென்னை திரும்பியது - MAKKAL NERAM

Breaking

Thursday, June 12, 2025

அகமதாபாத் புறப்பட்ட விமானம் மீண்டும் சென்னை திரும்பியது

 


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் விபத்துக்குள்ளானது. இதனால் விமானத்தில் இருந்த 242 பயணிகளில் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து காரணமாக அகமகதாபாத் விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால், சென்னையில் இருந்து 182 பயணிகளுடன் அகமதாபாத் சென்ற விமானம் அங்கே தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறது. நிலைமை சீரான பின்னர் சென்னை - அகமதாபாத் விமான சேவை மீண்டும் தொடங்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment