தாம்பரம் மாநகராட்சி நான்காவது மண்டலத்து வார்டுகளில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை மண்டல குழு தலைவர் காமராஜர் துவக்கி வைத்தார்


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட சமத்துவ பெரியார் நகரில் 54,55வது வார்டு பகுதியில் சாலை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் 1 கோடி 60 லட்சம் மதிப்பீட்டில்  நிதி ஒதுக்கீடு செய்து 9 சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகளை தாம்பரம் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவர் காமராஜர் அவர்கள் துவக்கி வைத்தார். 

இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் புகழேந்தி, பேச்சாளர் கருணாகரன், சமத்துவ பெரியார் நகர் நல சங்க தலைவர் ரஞ்சன் மற்றும் கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments