திருக்குவளை அருகே பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனுறை பொன்வைத்தநாதர் சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக பெருவிழா
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த சித்தாய்மூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற அகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனுறை பொன்வைத்தநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வைகாசி விசாக பெருவிழா விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் வீதி உலா புறப்பாடு இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு விநாயகர், அகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனுறை பொன்வைத்தநாதர் சுவாமி, வள்ளி தேவசேனா சமேத வில்லேந்திய வேலவர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்திருள மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடந்த சுவாமி வீதியுலா புறப்பாட்டின் போது வீடுகள் தோறும் மக்கள் அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன்
No comments