• Breaking News

    என்னுடைய இதயத்தில் ஸ்ரேயஸ் ஐயரின் மனைவியாக வாழ்ந்து வருகிறேன்...... பரபரப்பை கிளப்பிய தமிழ் பட நடிகை......

     


    இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர். இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்படுகிறார். இவர் கிட்டதட்ட 11 வருடங்களுக்குப் பிறகு பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிக்கு எடுத்து சென்ற நிலையில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

    இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பான வீரராக செயல்படும் இவர் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் கேப்டன் ஆக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல நடிகை எடின் ரோஸ் தற்போது நான் தான் ஸ்ரேயஸ் ஐயரின் மனைவி என்று கூறியுள்ளார். இவர் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நிலையில் பாலிவுட்டில் நடித்து வருகிறார்.இவர் தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இவருக்கு 26 வயது ஆகும் நிலையில் தான் ஸ்ரேயஸ் ஐயரை காதலிப்பதாக தற்போது கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் கூறியதாவது, என்னுடைய இதயத்தில் ஏற்கனவே நான் ஸ்ரேயஸ் ஐயரின் மனைவியாக வாழ்ந்து வருகிறேன். நான் அவருடைய 2 குழந்தைகளுக்கு தாயாக இருக்க விரும்புகிறேன். அப்படித்தான் என்னுடைய மனதிலும் நினைக்கிறேன். அவரின் தாடி, உயரம், நிறம் போன்றவைகள் என்னை மிகவும் கவர்ந்தது.அதோடு அவரும் என் தந்தையை போன்று தென்னிந்தியராக இருப்பதால் எனக்கு மிகவும் அவரை பிடித்துள்ளது. மேலும் இளம் நடிகை ஒருவர் கிரிக்கெட் வீரர் மீதான காதலை வெளிப்படையாக அறிவித்துள்ளது தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    No comments