தென்காசி: பாவூர்சத்திரத்தில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளருக்கு வரவேற்பு..... தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்....
தென்காசி, பாவூர்சத்திரம், சுரண்டையில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் ராஜபிரகாசுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்பேத்கர், காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக வெற்றிக்கழக தென்காசி மத்திய மாவட்ட செயலாளராக பாவூர்சத்திரத்தை சேர்ந்த ராஜபிரகாஷ் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று முதன் முறையாக வருகை தந்த அவருக்கு தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் நன்னகரம் அம்பேத்கர் சிலை, பாவூர்சத்திரம் காமராஜர் சிலை, சுரண்டை சிவகுருநாதபுரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாவூர்சத்திரம், சுரண்டையில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ்க்கு ஆளுயர மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.
இந்;நிகழ்ச்சியில், மாவட்ட இணை செயலாளர் சிவா, பொருளாளர் மாரியப்பன், துணை செயலாளர் அபுபக்கர் சித்திக், துணை செயலாளர் உமா, செயற்குழு உறுப்பினர்கள் ராபின் ஹெய்ன்ஸ் சாம், ராஜேஸ்வரி, மரகதவல்லி, இசக்கியம்மாள், ரஹ்மத்துல்லா அரபாத், மாரீஸ்வரன், அப்துல்ரசாக், மரியகனகராஜ், சரவணன், முகம்மதுகான் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேருர் நிர்வாகிகள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
No comments